கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 6 பேருக்கு பார்வை பறிபோனது

வாரணாசியில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 6 பேருக்கு பார்வை கிடைக்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரணாசியில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 6 பேருக்கு பார்வை பறிபோனது
லக்னோ :

.....

உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 6 பேர் கடந்த 12-ம் தேதி கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டனர். சிகிச்சை நடைபெற்ற சில மணி நேரங்களுக்கு பின் அவர்கள் அனைவரும் பார்வை இழந்துள்ளனர்.

அப்போது அவர்களிடம் அடுத்த மூன்று நாட்களில் பார்வை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என மருத்துவர்கள் பதில் அளித்திருந்தனர். ஆனால், மூன்று நாட்கள் கழித்தும் அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கவில்லை.

இந்நிலையில், பார்வை இழந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனையின் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த மாவட்ட துணை நீதிபதி விரேந்திர பிரசாத் பாண்டே அவர்களை சமரசம் செய்தார். இவ்விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு பார்வை கிடைக்காத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post