வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் மழைக்கு 12 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அசாம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. அசாம் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு நகரங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. கவுகாத்தி நகரின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பேரிடர் மீட்புக் குழுவினர் செய்து வருகின்றனர்.

.....

இந்நிலையில், இந்த மழையினால் இதுவரை 12 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 6 பேரும், அசாம் மாநிலத்தில் 3 பேரும், திரிபுராவில் 3 பேரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 500க்கு மேற்பட்டோர் வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Related Post