வடமாகாணத்தில் புதிய உள்ளூர் பேருந்து சேவைக்கான நிரந்தர வழி அனுமதி முதலமைச்சரால் வழங்கி வைப்பு


வடக்கு மாகாணத்தில் போக்குவரத்து தேவையை இலகு படுத்தும் விதமாக புதிய தனியார் போக்குவரத்துச் சேவைகளுக்கான நிரந்தர வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு யாழில் இன்று நடைபெற்றது.

யாழ் கிறீன் கிறாஸ் விடுதியில் இன்று காலை நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த வடமாகாண முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் நிரந்தர வழி அனுமதிப் பத்திரங்களை பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கி வைத்தார்.

.....

வடமாகாண போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ளு}ர் பேருந்துவேவைக்கென 45 நிரந்தர வழி அனுமதிப்பத்திரம் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது

இதனடிப்படையில் யாழ் மாவட்டத்திற்கு 25 பேருந்துகளிற்கும் மன்னார் வவுனியா கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தலா ஐந்து பேருந்துகளுக்கும் இவ்வறு நிரந்தர அனுமதி பத்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் நீக்கிளாஸ்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் போக்குவரத்து அதிகாரசபையின் உறுப்பினர்கள் போக்குவரத்துச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர

Related Post