நுண்கடன் திட்டத்திற்கு மாற்று திட்டம் வழங்குமாறு கிளிநொச்சியிலும் போராட்டம்

இன்று காலை 10மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமானது.
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மாற்று திட்டங்களை வங்கிகள் ஊடாக மக்களிற்கு வழங்க கோரியும் மக்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் மாவட்ட செயலகம் ஊடாக மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கான மகஜரும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.....

Related Post