கிளிநொச்சியில் காருடன் உந்துருளி மோதியதில் இளைஞன் படுகாயம்!

கிளிநொச்சி – ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சியிலிருந்து கரடிபோக்கு சந்திக்குச்சென்ற காரும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்து கிளி.பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

.....

Related Post