அனைத்து பரீட்சைகளும் குறிப்பிட்ட திகதியில் இடம்பெறும் – பரீட்சைத் திணைக்களம்…

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் மூலம் ஜூன் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பரீட்சைகளும் குறிப்பிட்ட திகதியில் இடம்பெறும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக குறித்த பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டை கிடைக்காத போதிலும் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எந்தவொரு பரீட்சாத்திக்காவது பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கவில்லை எனின் பரீட்சை திணைக்களம் அல்லது வெளிநாட்டு பரீட்சை கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

.....

மேலும் குறிப்பிட்ட பரீட்சைக்கு சமூகமளிக்கும் பரீட்சாத்திகளுக்கு பரீட்சை நடைபெறும் திகதி, பரீட்சை நடைபெறும் மத்திய நிலையம் ஆகியவற்றுடன், விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று கிடைக்கபெறும் என்று தெரிவித்துள்ளது.

தற்போழுது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள பரீட்சைக்கான பரீட்சை கட்டணம் செலுத்துவதற்கு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொலைபேசி இலக்கம் வருமாறு: 011-2785230
தொலைநகல் இலக்கம் : 011-2784232

Related Post