கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் இளைஞர்கள்.

கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை மாணவிகளை தொந்தரவு செய்யும் இளைஞர்களால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதுடன் மன உழைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

2009 இறுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பலர் பெற்றோர்களை இழந்து பல சிரமங்களுக்கிடையே கல்வி பயின்று வருகின்றனர்.
கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் முன்னால் பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் பாடசாலை விடுகின்ற நேரங்களில் வெளியிடங்களில் இருந்து வரும் இளைஞர்கள் சிலர் மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்து வருவதாக அக்கல்லூரியில் கல்வி கற்கும் மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பாக அதிபர் அவர்களுக்கு தெரிந்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.

.....

இன்நிலையால் தினமும் தாம் மனஉழைச்சலுக்கு ஆழாவதாகவும் இதனால் தமது கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் மாணவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related Post