வர்த்தக நிலையமொன்றில் தீ! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் பலி

பசறை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக மூன்று பெண்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
தீ விபத்தின் காரணமாக குறித்த வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், அதனுள் தங்கியிருந்த மூன்று பெண்களும் இதன்போது பலியாகியுள்ளனர்.

.....

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், ஒன்றுவிட்ட உறவுக்காரப் பெண் ஒருவர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பசறை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Post