வன்னியில் சரவணபவன் எம்.பியின் பத்திரிக்கை ஆப்பு அடிக்க களம் இறங்கினார் சிவமோகன் எம்.பி

சரவணபவன் எம்.பியின் உதயன் பத்திரிகைக்கு போட்டியாக வன்னியில் சிவமோகன் எம்.பி வன்னி முரசம் என்ற பத்திரிகையை ஆரம்பித்துள்ளார்.

வன்னி குறோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ஆர்.ரூபன் தலைமையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் காரியாலயத்தில் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றது.

.....

பத்திரிகையின் முதற் பிரதியை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வெளியிட்டு வைக்க வன்னிகுறோஸ் மகளிர் பேரவையின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செல்வி எஸ்.அர்ச்சனா பெற்றுக்கொண்டார். இப்பத்திரிகை மூலம் கூட்டமைப்புக்கு சார்பாக பிரச்சாரம் செய்து தனது இருப்பை தக்க வைக்க சிவமோகன் எம்.பி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கவிஞரும், எழுத்தாளருமான யோ.புரட்சி பத்திரிகையின் விமர்சன உரையை ஆற்றினார். இந்நிகழ்வில் வன்னி குறோஸ் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Post