பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் விஜய்

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் (ஜூலை 22-ஆம் தேதி) நெருங்கி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் முன்னதாகவே பிறந்தநாள் கொண்டாட்டங்களை திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் நடிகர் விஜய் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் கூறியிருக்கிறாராம்.

.....

சமீபத்தில் தூத்துக்குடி சென்ற விஜய் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் அமெரிக்கா செல்ல இருக்கின்றனர். பிறந்தநாளன்று விஜய் இந்தியாவில் இருக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

விஜய் பிறந்தநாளுக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட வேண்டாம் என்று படக்குழுவினரிடம் விஜய் கேட்டிருக்கிறாராம். இதன்மூலம் பர்ஸ்ட் லுக் வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Related Post