வடமராட்சி பாடசாலைகளில் நிர்மானிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்


கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் யாழ் கரவெட்டி தேவரையாளி இந்து கல்லூரியில் நிர்மானிக்கப்பட்ட ஆரம்ப பிரிவு கற்றல்வளை நிலையம் கனிஸ்ட இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் விஞ்ஞான ஆய்வுகூடம் என்பன இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன

கல்வி அமைச்சின் ஐம்பத்திநான்கு மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் குறித்த மூன்று கட்டிடங்களும் நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றிற்கான தொழில்நுட்ப உபகரண வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது

.....

கல்லூரி முதல்வர் கி.இராஜதுரை தலைமையில் இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதா கிருஸ்ணன் பிரதம விருந்தினராக கலந்துககொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார்

அத்துடன் யாழ் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடத்தொகுதி மற்றும் அதிபர் விடுதிஎன்பனவும் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது

கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு இக்கட்டிடங்களை திறந்து வைத்தனர்

பதின்மூன்று மில்லியன் நிதியில் இரண்டு மாடிகளைக்கொண்டதான வகுப்பறைக்கட்டிடமும் ஆறு மில்லியன் நிதியில் அதிபர் விடுதியும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வடமாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார் வடமராட்சி கல்விப்பணிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்டவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Related Post