முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து நாளை முதல் பணிப்புறக்கணிப்பு!

முல்லைத்தீவு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் நாளை முதல் (14) தமக்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் வரை கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கவுள்ளதோடு பணிப்பகிஷ்கரிப்பிலும் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து முல்லைத்தீவு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் ,

.....

எமது பேரூந்து உரிமையாளர்களின் ஒருமித்த வேண்டுகைக்கமைய எமது அடிப்படை பிரச்சனைகளை சீர் செய்வது தொடர்பாக வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கும் வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்திற்கும் பல தடவைகள் நேரடியாகவும் தெரியப்படுத்தியும் எதுவிதமான ஆக்கபூர்வமான தீர்வுகளும் கிடைக்காத நிலையில் 2018 .06.14 ஆம் நாள் அதிகாரசபையால் பேரூந்துக்கான நிரந்தர வழி அனுமதிப்பத்திரம் குறிக்கோளாய் இருக்கிறது. இது முல்லைத்தீவு தனியார் பேரூந்து சங்க உரிமையாளர்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே எமது அடுத்த கட்ட நகர்வாக எமது சகல பேரூந்து பணிகளையும் நிறுத்தி எண்களின் எதிர்ப்பினை சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தவுள்ளோம்.ஆகவே எமது கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரை நாளை முதல் (14) முல்லைத்தீவு மாவட்டத்துக்குரிய அனைத்து தனியார் பேரூந்துக்களும் சேவையில் ஈடுபடமாட்டாது என தெரிவித்துக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Post