சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதியமைச்சுப் பதவி! அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்?

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார பிரதி அமைச்சுக்களில் இருந்து இந்து மத விவகார பிரதி அமைச்சுப்பதவியை மட்டும் வேறு ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இந்து மத விவகார பிரதி அமைச்சுப்பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட்டதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இது தொடர்பில் அறிக்கைகளும், கண்டனங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கின்றன. தமிழ் இந்து அமைச்சர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே காதர் மஸ்தானிடம் இருந்து இந்து மத விவகார பிரதி அமைச்சுப்பதவியை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவலகள் தெரிவிக்கின்றன.

Related Post