மஸ்தான் இந்து விவகார அமைச்சரானதை வரவேற்று அடைக்கலநாதன் எம்.பியின் அலுவலகத்தில் இப்தார் நிகழ்வு: கொதிக்கும் மக்கள்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் இந்து விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதையத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி தலைவரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வவுனியா அலுவலகத்தில் இப்தார் நிகழ்வு நேற்று கொண்டாடப்பட்டது.

யுத்தத்தில் மரணித்த மக்கள், போராளிகள் தொடர்பிலுலோ, இந்து மற்றும் கிறிஸ்தவ சமய பண்டிகைகளையோ தமது அலுவலகத்தில் கொண்டடாத செல்வம் அடைக்கலநாதன் எம்.பி முதல் முறையாக இப்தார் நிகழ்வை தனது அலுவலகத்தில் கொண்டாடியுள்ளார்.

.....

மஸ்தான் எம்.பி இந்து விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள நிலையில் அதனை வரவேற்று தனது அலுவலகத்தில் இப்தார் நிகழ்வை கொண்டாடி செல்வம் எம்.பி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அண்மைக்காலமாக வவுனியாவில் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை காணவில்லை என மக்கள் தேடி வரும் நிலையில் தற்போது இப்தார் நிகழ்வை கொண்டாடி சார்ச்சையில் சிக்கியுள்ளார். இவ் இப்தார் நிகழ்வில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் மயூரன் மற்றும் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு மஸ்தான் எம்.பி மீதான தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Related Post