கட்டிய மனைவியை தீ மூட்டிய கணவன் விசுவமடுவில் கொடூரம்!
கட்டிய மனைவியை நண்பனின் முன்னால் தீ மூட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளம் தாய் 6 நாட்கள் மேற்கொண்ட சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்தில் மயூரன் – துளசி என்னும் 23 அகவையுடைய தேராவில் விசுவமடு என்னும் முகவரியை கொண்ட இளம் தாயே படுகொலை செய்யப்பட்டவராவார்.

மேற்படி விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,

.....

தேராவில் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் கடந்த 5 ம் திகதி உயிரிழந்தவரின் கணவரும் அவரது நன்பரும் இணைந்து மது அருந்தியுள்ளனர். குறித்த சமயம் கணவன் மனைவி இடையே வாய்த்தர்க்கம் மோதலாக மாறி மணைவியை தாக்க முற்பட்டுள்ளார்.

இவ்வாறு கணவர் தினமும் தாக்குவதனால் மன விரத்தியடைந்த மனைவி தனக்குத் தானே எண்ணை ஊற்றியுள்ளார். இதன்போது கணவர் தீயை மூட்டியுள்ளார். இதன் காரணமாக படுகாயமடைந்தவரை உடனடியாக தர்ம்புரம் வைத்துயசாலையில் சேர்க்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிரையில் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 10ம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் 11ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் கணவனின் நண்பரும் பொலிசாரிம் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். மேற்படி மரணம் தொடர்பான மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். –

Related Post