மின்னல் தாக்கி 10 பேர் பலி

மேற்கு வாங்காளம் மாநிலத்தில் மின்னல் தாக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 10 பேர் பலி
கொல்கத்தா :

.....

மேற்கு வாங்காளம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்தில் கனமழை காரணமாக மின்னல் தாக்கியதில் 4 பேரும், ஹூக்லி மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு மித்னாபூர், பிர்பூம் மற்றும் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் மின்னலுக்கு` பலியாகியுள்ளனர். மேலும், பலர் மின்னல் தக்கியதில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post