இந்து விவகார அமைச்சை முஸ்லிமிடம் கொடுப்பதற்கு பதிலாக அதை இழுத்து மூடுங்கள்-சிவசேனை போர்க்கொடி

இந்து கலாசார பிரதி அமைச்சராக மஸ்தான் எம்.பி நியமிக்கப்பட்டதற்கு சிவசேனை அமைப்ப கண்டன அறிக்கை வளியிட்டுள்ளது

இலங்கையில் இந்துக் கலாசார அமைச்சுக்கு இன்று (12.06.2018) முதலாக இசுலாமியரைத் துணை அமைச்சராக்கிய கொடுமையை இந்துக்களை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம்.

.....

மாண்புமிகு துணை அமைச்சர் நீறணிந்து சந்தனமிட்டுச் சிவராத்திரி விழாவுக்கு வருராவாரா?

ஏனைய சமயத்தவர்களைக் காபீர்கள் (நீசர்கள்) எனக் கற்றவர், உருவ வழிபாட்டையே ஒத்துக்கொள்ளதவர், இந்துக்களை இசுலாமுக்கு மத மாற்றுவதையே இலக்காகக் கொண்ட குழு சார்ந்தவர், இந்துக்கள் வழிபடும் மாடுகளைக் கொன்று உண்பவர், இந்து ஒருவர் தன் சட்டைப் பைக்குள்ளேயேனும் இந்துக் கடவுளரின் படத்தை வைத்திருத்தலைக் கொடும் குற்றமாகக் கருதித் தண்டிக்கும் சவூதி அரேபிய நாட்டிற்குப் புனித வழிபாட்டுப் பயணம் மேற்கொள்பவர், மட்டக்களப்புக் கல்லடியில் அம்பாறைக் கல்முனைக்குடியில் இந்துக் கோயில்களின் மேல் இசுலாமியப் பள்ளிவாயில்களைக் கட்டியெழுப்பியதை எப்பொழுதும் கண்டிக்காதவர், அத்தகையவர் இந்துக் கலாசார அமைச்சின் மாண்புமிகு துணை அமைச்சர்.

இந்துக் கலாசார அமைச்சுக்குள் புற்றுநோயைக் கருவைப் புகுத்தி அணு அணுவாக இந்துக்களை வதைப்பதைவிட, மாட்சிமை தங்கிய குடியரசுத் தலைவரே, இந்துக் கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள். நல் ஆட்சி அரசா? இந்துக்களின் கொல் ஆட்சி அரசா இந்த அரசு?

Related Post