மரைக்கூட்டத்துடன் மாங்குளத்தில் கார் விபத்து

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியின் 9ம் கட்டை பகுதியிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1.30மணியளவில் முல்லைத்தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அதிசொகுசு காருக்கு முன்னால் சென்ற மரைக்கூட்டம் குறுக்கறுத்ததால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கார் வீதியை விட்டு விலகியே தடம்புரண்டுள்ளது.காரில் மூவர் பயணித்துள்ளனர்.மூவரும் தெய்வாதீனமாக உயிரிழப்போ காயங்களோ இன்றி தப்பியுள்ளனர்.

Related Post