வடக்கு – கிழக்கில் மாவட்ட நீதிபதிகள்- 9 பேருக்கு இடமாற்றம்!!

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஆண்டின் இடைக்கால இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 9 மாவட்ட நீதிபதிகள் எதிர்வரும் 16ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதியாகவும், மல்லாகம் மேலதிக மாவட்ட நீதிபதி ரி. கருணாகரன் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியகவும் , மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா கிளிநொச்சி மாவட்ட நீதிபதியாகவும், கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா மல்லாகம் மேலதிக மாவட்ட நீதியாகவும், மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா மல்லாகம் மாவட்ட நீதிபதியாகவும், ஹெப்பட்டிக்கொல்லாவ மாவட்ட நீதிபதி ரி.ஜெ.பிரபாகரன் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும்,ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி ஏ.ஏ.றியாழ் வவுனியா மாவட்ட நீதிபதியாகவும், அவிசாவலை மாவட்ட நீதிவான் ஜுவராணி கருப்பையா மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அறிய முடிகிறது.

.....

Related Post