ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை

மாகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை
மும்பை :

.....

மாகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள ஆராதனா நகரை சேர்ந்தவர் கம்லாகர் பொஹங்கர். இவர் குடியிருக்கும் வீட்டின் வெளியே எலக்ட்ரிக் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பொஹங்கர், அவரது மனைவி, தாய், மகள் மற்றும் உறவினர் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த, படுகொலை சம்பவம் இன்று அதிகாலை வேலையில் நடைபெற்றுள்ளது. கூர்மையான கத்தியின் மூலம் அவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரே இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post