இராணுத்திற்கு விழா எடுத்து தமிழனின் அடிமை புத்தியை காட்டிய வன்னி மக்கள்-சிவாஜிலிங்கம் சாடல்

விஸ்வமடு பகுதியில்கேர்ணல் பந்து இரத்னபிரியாவிற்கு கண்ணீர்மல்கமுன்னாள் போராளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பிரியாவிடை கொடுத்திருப்பது தமிழ் மக்களின் சபல புத்தியைத்தான் காட்டுவதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்
தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு இராணுவ அதிகாரியை தோளில் சுமந்து கொண்டு செல்வது தமிழ் மக்களின் அடிமைப்புத்தியைத்தான் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

.....

யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இது எமது மக்களின் சபல புத்தியையே காட்டுகின்றது, இவர் நல்லவர், அவர் நல்லவர் என சாதாரண கிராம் மக்கள் இதை செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்,ஆனால் முன்னாள் போராளிகள் இதனை செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதுவும் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என வெடித்துச் சிதறி வீரச்சாவை தழுவிக்கொண்ட ஐம்பதாயிரம் மாவீரர்களுக்கு செய்கின்ற துரோகமாகத்தான் நான் இதை கருதுகின்றேன்.

அவர் ஒரு அதிகாரி, நல்லவராக அல்லது நேர்மையாக நடந்து கொள்ளலாம், ஆனால் நீங்கள் இவ்வாறு செய்வதென்பது ஒட்டுமொத்த இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்துகின்ற பாரிய பிரச்சினைக்கு இட்டுச்செல்லும்.

ஒரு தனி மனிதன் நல்லவராக இருக்கலாம், தளபதியாக இருக்கலாம், பிராந்திய தளபதியாக இருக்கலாம் அது வேறு விடயம் அதற்காக தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு, விழா எடுத்து,தோளில் சுமந்துகொண்டு செல்வது என்பது எங்களுடைய அடிமை புத்தியைத்தான் காட்டுகின்றது.

Related Post