தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா

இன்ஸ்டாகிராமில் அதிக அளவிலான மக்களால் பின்தொடரப்படும் இந்திய நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோனைப் பின்னுக்குத் தள்ளி பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்துள்ளார்.

தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரும் இந்தி திரையுலகம் மட்டுமல்லாது ஹாலிவுட் படங்களிலும் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளனர். குவாண்டிகோ தொடர் மூலமாக பிரியங்காவை ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின்தொடர்கின்றனர். இதனால் இந்திய அளவில் அதிக அளவிலான மக்களால் இன்ஸ்டாகிராமில் பின்தொடரப்படும் நடிகையாக இருந்த தீபிகாவை, பிரியங்கா சோப்ரா பின்னுக்குத் தள்ளியுள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரியங்கா சோப்ராவை சுமார் 2.4 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

.....

சில ஆயிரங்கள் வித்தியாசத்தில் தீபிகா படுகோன் பின்தங்கியுள்ளார். இதன் மூலம் அதிக அளவிலான மக்களால் இன்ஸ்டாகிராமில் பின்தொடரப்படும் நடிகையாக பிரியங்கா சோப்ரா முன்னேறியுள்ளார்.

Related Post