பெண்கள் நல அமைப்பில் சேர மறுத்த நமீதா பிரமோத்

கடந்த ஆண்டு கேரளாவில் நடிகை பாவனா கடத்தப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் திலீப் திட்டமிட்டு கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அப்போது பார்வதி மேனன், ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகைகள் இணைந்து பெண்கள் பாதுகாப்புக்காக ஒரு அமைப்பை தொடங்கினார்கள்.

நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைப்பாக இது கருதப்பட்டது. இந்த அமைப்பில் சேருவதற்கு மலையாள முன்னணி நடிகை நமீதா பிரமோத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் மறுத்துவிட்டாராம்.

.....

இந்த அமைப்பில் உள்ள நடிகைகள் பரபரப்புக்காக ஏதாவது பேசி சிக்கலில் மாட்டுவார்கள். எனவே நான் இதில் சேர விரும்பவில்லை என்று மறுத்துவிட்டாராம். நமீதா, திலீப்புக்கு நெருக்கமானவர் எனவே தான் சேர மறுக்கிறார் என்கிறார்கள். நமீதா தமிழில் உதயநிதியுடன் நிமிர் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Post