விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ளது சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம். இங்கு இன்று அதிகாலை வந்த பயணிகளின் உடமைகளை வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்நிலையில், அங்கு சந்தேகப்படும் படியாக இருந்த நபரை சோதனை செய்த அதிகாரிகள், அவர் மறைத்து வைத்திருந்த 715 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

.....

மேலும், அவரை கைது செய்து, தங்க கடத்தலின் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 24 லட்ச ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post