கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.

கிட்டத்தட்ட 400மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான, ஒரு லட்சத்து முப்பத்தேழாயிரம் கிலோ பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை இப்போதான் கண்டு பிடித்திருக்கிறார்களாம் இலங்கையின் சுகாதார சேவை அதிகாரிகள்.
சீனா, தாய்லாந்து, பின்லாந்து போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரின்மீன்கள் நஞ்சு என ஒரு வருடத்துக்கும் மேலாகச் சொல்லிக் கொண்டும் எழுதிக் கொண்டும் வருகின்றனர்.

யாரும் கரிசனைக்கெடுப்பார் கிடையாது. இவை தினமும் 200தொன் என்ற விகிதாசாரத்தில் வந்து இறங்குகின்றன.
இத்தனைக்கும் யுத்தகாலங்களுக்கு முன் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் இருந்து பல்லாயிரம் மெற்றிக் தொன் மீன்களையும் கருவாடுகளையும் தென்னிலங்கை மக்களின் உணவுப் பாவனைக்காக தினமும் அனுப்பிக் கொண்டிருந்தோம்.

.....

இப்போ ஏன் இந்த நிலை, யாரால் இந்த நிலை என கொஞ்சமாவது இனியாவது சிந்திப்போமா?தமிழ்ப் பிரதேசங்களில் போஷாக்கில்லாத ஒரு நோஞ்சான் தலைமுறை உருவாகி வருகின்றது என்ற உண்மையை நாம் எப்போ உணரப் போகிறோம்.

Related Post