ஷாருக்கானுடன் பிறந்தநாள் கொண்டாடிய மாதவன்

‘இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு மாதவனுக்கு தமிழ், இந்தி மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால், தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தை மற்றும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாதவன், சில மாதம் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜீரோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது பிறந்த நாளை ஜீரோ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

.....

அப்போது நடிகர் ஷாருக்கான், நடிகை அனுஷ்கா சர்மா, ஜீரோ படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் மற்றும் படக்குழுவினர் மாதவனுக்கு வாழ்த்து கூறினார்கள்.

Related Post