அதற்கும் தயார் – பிரபல நடிகையின் திடீர் முடிவு

மும்பையை சேர்ந்த பூனம் நடிகை, கோழியின் ஆண் இனத்தை குறிக்கும் பெயர் கொண்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாராம். அந்த படம் போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், நாயகி அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி, பின்னர் சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போனாராம்.

பின்னர் ஜெயம் நாயகனின் ரோமியோ படத்தில் இரண்டாவது நாயகியாக ரீ-என்ட்ரி கொடுத்து, பின்னர் ஒருசில படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

.....

இதுவரை குடும்பப் பாங்கான கதாபாத்திரம் மற்றும் சற்றே கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்த நாயகி, தற்போது படுகவர்ச்சிக்கும் தயாராகி விட்டாராம். அதுமட்டுமில்லாமல் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடவும் தான் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறாராம்.

நல்லாத்தான போயிட்டு இருக்கு. இப்போது தான் படவாய்ப்பு அடுத்தடுத்து வருகிறது. அதை கெடுக்கும் வகையில் நாயகி ஏன் இப்படி முடிவு செய்திருக்கிறார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்

Related Post