சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்

சர்க்கரை நோயாளிகள் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பனிவரகு காய்கறி சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்
தேவையான பொருட்கள் :

.....

பனிவரகு – 1 கப்
தக்காளி – 1,
வெங்காயம் – 1
வெள்ளரிக்காய் – 1,
கேரட் – 1
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு.


செய்முறை :

பனிவரகை நன்றாக சுத்தம் செய்து இரண்டரை கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கேரட், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேகவைத்த பனிவரகு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்கறிகளைச் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து புதினா, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்

Related Post