நாளை முதல் பாடசாலை பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
பாடசாலை போக்குவரத்துக் கட்டணம் நாளை (01) முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

எரிபொருள் விலை அதிகரித்தமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

.....

நாளை முதல் போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் ஹரிஸ்சந்திர பத்மசிறி தெரிவித்தார்.

தூரத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டணத்தை அதிகரிக்குமாறு தமது உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி குறிப்பிட்டார்.

Related Post