யாழ் மக்களுக்கு எச்சரிக்கை-நல்லூரில் பௌத்த விகாரை!!!

நல்லூர் கந்த சுவாமி ஆலயத்துக்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்தார்.

.....

வடமாகாண சபையின் 123ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“முல்லைத்தீவு மாவட்ட கொக்கிளாய் நாயாறு பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அடாத்தாக வாடிகள் அமைத்து தங்கி இருந்து , சட்டவிரோதமான மீன் பிடி முறமைகள் மூலம் மீன் பிடியில் ஈடுபடுகிறார்கள் என இந்த சபையில் மூன்று வருடங்களுக்கு மேலாக கூறி வருகின்றேன்.

அது தொடர்பில் மத்திய மீன் பிடி அமைச்சராக அப்போதிருந்த மகிந்த அமரவீரவிடம் நேரில் கூட முறையிட்டு உள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை.

கொக்கிளாய் பகுதிகளில் தொடங்கிய ஆக்கிரமிப்பு நாயாறு , சாலை சுண்டிக்குளம் தாண்டி தற்போது யாழ்.மாவட்டம் மருதங்கேணி வரை தொடர்கின்றது. ஆனால் அதனை தடுக்க முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம்.

இவ்வாறே சென்றால் நல்லூர் முருகன் ஆலயத்துக்கு அருகில் பௌத்த விகாரை அமையும் காலம் வெகு விரைவில் இல்லை என்றே தோன்றுகின்றது” என்று ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் மேலும் தெரிவித்தார்

Related Post