மரக்கன்று விநியோகத்தில் இறங்கிய வடமாகாண ஆளுனர்!!!

யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் பாடசாலைக்கு மரக்கன்றுகளை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று (30) வழங்கி வைத்தார்.

.....

எதிர்வரும் ஜீன் மாதம் 5ம் திகதி தேசிய மரம் நடுகை மாதத்தினை முன்னிட்டு தினத்தை முன்னிட்டு சுமார் 4ஆயிரம் மரக்கன்றுகளை யாழ் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாட்டுவதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் றெஜினோல்குரே மேற்கொண்டிருக்கின்றார்.

அதற்காக பாடசாலைகளுக்கான மரங்களை அந்தந்த பாடசாலைகளுக்கு நேரடியாக சென்று மாணவர்களிடம் ஆளுநர் கையளித்தார்.

யாழ் வேம்படி மகளீர் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி, யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி, வண்ணை நாவலர் மகாவித்தியாலயம், கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம், யாழ் கொட்டடி நமசிவாய வித்தியாலயம், சுண்டுக்குளி மகளீர் கல்லூரி, சென்ஜோன்ஸ் கல்லூரி, சென் பற்றிக் கல்லூரி, கனகரத்தினம் மகாவித்தியாலயம், பெரியபுலம் மகாவித்தியாலயம், நல்லூர் சென் பெனடிக் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, யாழ் இந்து மகளீர் கல்லூரி, இந்து ஆரம்ப பாடசாலை, சன்முகானந்தா கல்லூரி, கோலி பமிலி கன்வென் உள்ளிட்ட 16பாடசாலைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

பலா, மா, மவுக்கனி, நெல்லி,முந்திரி, உள்ளிட்ட மரங்கள் எதிர்வரும் 5ம் திகதி நாட்டி வைக்கப்படவுள்ளது.

Related Post