வவுனியா நகரசபை ஊழியர்கள் போராட்டம்

வவுனியா நகரசபை ஊழியர்கள் இன்று காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டனர். கடந்த வாரம் வவுனியா நகரசபை தலைவருக்கு வவுனியா சிறைச்சாலையின் பாதுகாவலரினால் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இன்று தாம் கண்டனமும் அடையாள வேலைநிறுத்தமும் மேற்கொண்டதாக நகரசபை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவாக செட்டிகுளம் பிரதேச சபை, நெடுங்கேணி பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, சிங்கள பிரதேச சபை ஆகியன தமது ஆதரவினை வழங்கியிருந்தன
காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரை இடம்பெற்ற அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இறுதியில் தேசிய அரச பொது ஊழியர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்ட ஊழியர்கள் 10 மணியளவில் தமது கடமைகளுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்து.

Related Post