இலங்கைக்கு சட்டவிரோத படகில் வந்த ஈழ அகதிகள் ஆறுபேர் கைது

தமிழ் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு பிரவேசிக்க முனைந்த ஆறுபேர் பருத்தித்துறை பொலீசாரால் கைது
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட அகதிகளுள் அறுவர் சட்டவிரோத படகொன்றில் இலங்கைக்கு வர முயற்சித்துள்ளனர்.இதன் போது இன்று நடுக்கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் குறித்த ஆறுபேரையும் கைது செய்து பருத்தித்துறை பொலீசாரிடம் ஒப்படைத்தனர்.அத்துடன் படகில் சட்டவிரோதமாக குறித்த அகதிகளை ஏற்றிவந்த மன்னாரைச்சேர்ந்த படகோட்டியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக பருத்தித்துறை பொலீசார் தெரிவிக்கின்றனர்

Related Post