காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய சாய்னா, பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்தனர்.

குறிப்பாக, மகளிர்க்கான பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தங்கப்பதக்கமும், பி.வி.சிந்து வெள்ளி பதக்கமும் வென்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் நேற்று ஐதராபாத் திரும்பினர். விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களுக்கு ரசிகர்கள் மலர்க்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Post