காணாமல் போன ராணுவ வீரர் பயங்கரவாத அமைப்பில் இணைந்தார்

ம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் மாயமான ராணுவ வீரர் ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன ராணுவ வீரர் பயங்கரவாத அமைப்பில் இணைந்தார்?
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ராணுவ சிப்பாயாக வேலை பார்த்து வந்தவர் மிர் இட்ரஸ் சுல்தான்.

கடந்த 12ம் தேதி தனது கிராமத்துக்கு வந்தவர் மறுதினம் முதல் காணவில்லை. இதுதொடர்பாக சுல்தான் தந்தை உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் மாயமான ராணுவ வீரர் ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், காணாமல் போன ராணுவ வீரர் சுல்தான் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பில் சேர்ந்திருக்கலாம். அவருடன் மேலும் இரண்டு உள்ளூர் இளைஞர்களும் அந்த அமைப்பில் சேர்ந்திருக்கலாம். இதுகுறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்

Related Post