மன்னார் கடல் கரையில் வெடிகுண்டுகள் – குவிக்க பட்ட இராணுவம் ..!

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரைப்பகுதியில் நேற்று மாலை பேசலை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து ஒரு தொகுதி மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளனர்.
பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரைப்பகுதியில் பருவ கால மீன்பிடித் தொழிலை வங்காலை மற்றும் தாழ்வுபாடு மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தாழ்வுபாடு மீனவர்கள் குறித்த பகுதியில் வாடி அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் மீனவர் ஒருவர் கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை குறித்த கடற்கரை பகுதியில் குழி தோண்டிய போது இரும்புப்பெட்டியை அவதானித்து அருகிலுள்ள கடற்படையினரிடம் தெரிவித்து பின்னர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு;ள்ளார்

இதனையடுத்து குறித்த இடத்தில் பொலிஸார் பாதுகாப்பை மேற்கொண்டதுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வெடி பொருட்களை மீட்டனர்.

-இதன் போது குறித்த குழியில் இருந்து 81 ரக மோட்டார் குண்டுகள் 15 மற்றும் 61.ரக மோட்டார் குண்டு 1. ஏன்பன மீட்கப்பட்டுள்ளது.

-மீட்கப்பட்ட குண்டுகள் பேசாலை பொலிஸ் பகுதிக்குற்பட்ட கட்டுப்பகுதியில் செயழிலக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related Post