சிரியாவின் கெமிக்கல் குண்டு பகுதி முற்றாக தாக்கி அழிப்பு – அமெரிக்கா கொக்கரிப்பு .>!

சிரியாவில் ஆளும் ஆசாத் படைகள் கெமிக்கல் குண்டு தாக்குதலை நடாத்தி வருவதாக தெரிவித்து
அமெரிக்கா தலைமயில் ,பிரிட்டன் ,பிரான்ஸ் படைகள் இணைந்து தாக்குதலை நடத்தி
வருகின்றனர் .இந்த குண்டு தாக்குதலில் குறித்த கெமிக்கல் பகுதிகள் முற்றாக அழிக்க
பட்டுள்ளதாக கூட்டு படைகள் தெரிவித்துள்ளன .

சுமார் நூற்றி ஐந்து வான்வழி தாக்குதல் இலக்கு வைத்து தாக்க பட்டன ,அதன் அடிப்படையில் அந்த பகுதி முற்றாக
அழிக்க பட்டு விட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மேற்படி கூட்டு படைகள் தாக்குதலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்
மூன்றாம் உலக போர் மூளும் அபாயத்தை இந்த களமுனை ஏற்படுத்தியுள்ளன என்பதே வெளிப்படை
நிகழ்வுகளாக காண்பிக்கின்றன .

ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது மேலும் சிக்கலை இறுக்கியுள்ளது .
– வன்னி மைந்தன் –

Related Post