பிரிய மனம் இல்லாமல் பிரிந்த தமன்னா

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்த தமன்னா, படக்குழுவினரை விட்டு பிரியவே மனம் இல்லாமல் பிரிந்திருக்கிறார்.

சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ படத்தில் விஜய்சேதுபதியுடன் தமன்னா நடித்தார். இப்போது, சீனுராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் உதயநிதியுடன் நடித்து வருகிறார்.

சீனுராமசாமி இயக்கத்தில் மீண்டும் நடிப்பது பற்றி கூறிய தமன்னா…

“ ‘கண்ணே கலைமானே’ படத்தில் வங்கி ஊழியராக நடிக்கிறேன். மிகவும் உணர்ச்சி மயமான வேடம். ‘தர்மதுரை’ படம் போல, இந்த படத்திலும் சீனுராமசாமி என்னை அழுத்தமான வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

இந்த படம் மதுரை கதை களத்தில் தயாராகி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. எனக்குரிய காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு திரும்பும்போது, அந்த படக்குழுவை விட்டு பிரியவே மனம் இல்லை. அந்த அளவுக்கு சீனுராமசாமியின் படத்தில் நடிப்பது இனிமையான அனுபவமாக இருந்தது. இதுவும் எனக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும்” என்றார்.

Related Post