ஜெனீவாவில் சிறிலங்காவை கேள்விக்குட்படுத்திய போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர்! நடந்தது என்ன ?

போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் Stephane J Rapp கலந்து கொண்ட சிறிலங்கா தொடர்பிலான
பக்க நிகழ்வொன்று ஐ.நா மனித உரிமைச்சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் இடம்பெற்ற பாரிய படுகொலைகளுக்கான பொறுப்புக்கூறலில் அனைத்துலக சமூகம் எவ்வாறு தோற்றுப்
போனது எனும் தொனிபொருளில் இந்த பக்க நிகழ்வு இடம்பெற்றது.

இதில் சிறிலங்காவின் நிலைமாறு கால நீதிச்செயற்பாடுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் கம்போடிய
கலப்பு நீதிமன்ற சட்டவாளருமாகிய Richard J Rogers இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

தாமதிக்கும் தந்திரத்தனை சிறிலங்கா கடைப்பிடித்து அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை தட்டிக்கழிக்கின்றது என
சிறிலங்கா மீது கடுயைமான விமர்சனத்தை முன்வைத்த Stephane J Rapp , ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கிய நாடுகள் சிறிலங்காவை பொறுப்புக்கூற வைப்பதில் கடுயைமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.


அமெரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவர் ஒபமாவின் நிர்வாகத்தில் போர் குற்ற விவகாரங்களுக்கான தூதரகாக இருந்த Stephane J Rapp
, பல தடவையில் சிறிலங்காவுக்கு முன்னர் பயணம் செய்திருந்தவர்.என்பது குறிப்பிட தக்கது

Related Post