அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்த விபத்தில் 2 பேர் பலி

அமெரிக்காவில் அருகே ரூஸ்வெல்ட் தீவில் போட்டோ கிராபர்கள் சென்ற ஹெலிகாப்டர் கோளாறு காரணமாக ஆற்றில் விழுந்தது விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பலியாகினர்.

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்த விபத்தில் 2 பேர் பலி
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் அருகே ரூஸ்வெல்ட் தீவு உள்ளது. அங்கு புகைப்படங்கள் எடுக்க போட்டோ கிராபர்கள் ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அங்கு சென்று கொண்டிருந்தனர். ஹெலிகாப்டரில் 6 பேர் பயணம் செய்தனர்.

ரூஸ்வெல்ட் தீவு அருகே சென்றபோது ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு ஏற்பட்டு நியூயார்க் அருகே ஓடும் கிழக்கு ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மீட்பு பணியில் நீச்சல் வீரர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். அவர்கள் ஹெலிகாப்டருடன் ஆற்றில் மூழ்கிய 3 பேரை உயிருடன் மீட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விமானி மட்டும் நீந்தி கரை ஏறினார்.

Related Post