ஹன்சிகாவின் புதிய தோற்றம் -அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. முன்னணி நாயகர்களுடன் நடித்த படங்களில் ஹன்சிகாவின் சிரிப்பும், உடல் அமைப்பும் ரசிகர்களை கவர்ந்தது.

கை நிறைய படங்களை வைத்து இருந்த ஹன்சிகாவுக்கு, தற்போது முன்பு போல் படங்கள் இல்லை. இந்த நிலையில் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் ஓரளவு எடையை குறைத்த ஹன்சிகா, அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டார். அப்போதே அந்த படத்தை பார்த்த ரசிகர்கள், இனி உடல் எடையை குறைக்க வேண்டாம். முன்பு இருந்த உடல் அமைப்புதான் அழகு என்று கூறி இருந்தனர்.

ஆனால், ஹன்சிகா தனது உடல் எடையை மேலும் குறைத்து ஒல்லியாகி இருக்கிறார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


‘நாளுக்கு நாள் இப்படி ஒல்லியாகிக் கொண்டே போகாதீங்க. பார்க்கவே வேதனையாக இருக்கிறது. பழைய உடம்புக்கு வாங்க. அதுதான் உங்களுக்கு தனி அழகு. அதை கெடுக்க வேண்டாம். உங்களை முன்பு போல பார்க்க ஆசைப்படுகிறோம்’ என்று ஏராளமான ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Post