நடிகை கஸ்தூரி வீட்டை முற்றுகையிட்ட 100 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வீடு புகுந்து மர்ம கும்பல் தாக்கியதில் சிறுவன் பலியானான். அவனது தாய் – சகோதரி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், குறிப்பிட்ட சமூகத்தை விமர்சனம் செய்து கருத்து வெளியிட்டு இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்குமார் தலைமையிலான சமூக நீதி சத்திரிய பேரவை சார்பில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள நடிகை கஸ்தூரி வீடு அருகே சமூக நீதி சத்திரிய பேரவை மாநில அமைப்பு செயலாளர் எஸ்.எம்.குமார் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ், கார்த்திகேயன், மலர் ஆறுமுகம், சசிகுமார், தினகரன், தாஸ், முத்து, வேலு, கவுரி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அவர்கள் கஸ்தூரியை கண்டித்து கோ‌ஷம் எழுப்பியபடி அவரது வீட்டை முற்றுகையிட சென்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Related Post