.காவல் நிலையத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள காவல் நிலையத்தின் மீது நேற்று இரவு பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் கர்ல்கூட் காவல் நிலையம் அமைந்துள்ளது. நேற்று இரவு அங்கு போலீசார் பணியில் இருந்தனர்.

அப்போது, பயங்கரவாதிகள் சிலர் அந்த காவல் நிலையத்தின் மீது திடீரென வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கர்ல்கூட் காவல் நிலையத்தின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணி நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Related Post