ஐ எஸ் தீவிரவாதிகளை வேட்டையாட ஈர்க்கிற்குள் நுழைந்துள்ள தென் கொரியாவின் 24 அதி உயர் சண்டை விமானங்கள் ..!

ஈராக் நாட்டில் நிலை கொண்டு அந்த அரசுக்கு எதிராக போர் புரிந்து வரும் ஐ எஸ் தீவிரவாதிகள் ,மற்றும் குருதிஸ் விடுதலை போராளிகள்
மீது தாக்குதலை தொடுக்கும் முகமாக ஈராக்கிய அரசு தென் கொரியாவில் இருந்து T-50 ஜெட் விமானங்களை
கொள்வனவு புரிகிறது .

இந்த போர் விமான கொள்வனவு தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ள பட்ட ஒப்பந்தங்களை
அடுத்து தற்போது இருபத்தி நான்கு விமானங்களை தென் கொரியா ஈராக்கிற்கு வழங்குகிறது .

மேற்படி சண்டை விமானங்கள் ஐ எஸ் தீவிரவாதிகள் மற்றும் குருதிஸ் விடுதலை போராளிகள் மீது
தாக்குதலை மேற்கொள்ள பயன் படுத்த படும் என தெரிவிக்க பட்டுள்ளது .

நாடுகளுக்கு இடையில் போர்களை உருவாக்கி அதன் ஊடக பெரும் தொகையில் ஆயுதங்கள்
விற்பனை புரிய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Related Post