போலீஸ் துணை ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி

டெல்லியில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாகனத்தில் துணை ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

டெல்லியை சேர்ந்த போலீஸ் துணை ஆய்வாளர் ஹனுமான் சஹாய் (54). இவர், இன்று போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாகனத்தில் பணியில் இருந்துள்ளார். அவர் பணியில் இருந்த பொழுது தீடிரென தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து படுகாயமடைந்த அவரை டெல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், அவர் மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தினால் பழுதடைந்த கட்டுப்பாட்டு அறை வாகனம் சரிசெய்வதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பணியில் இருந்த துணை ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது

Related Post