பாதுகாப்பு துறையில் இன்னும் அதிகளவில் பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் – நிர்மலா சீதாராமன்

பாதுகாப்பு துறையில் இன்னும் அதிகளவில் பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு துறையில் இன்னும் அதிகளவில் பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் – நிர்மலா சீதாராமன்
புதுடெல்லி:

டெல்லியில் பாதுகாப்பு துறையின் மருத்துவ பிரிவு பெண் அதிகாரிகள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் முதல் பெண் ஏர் மார்ஷலான பத்மாவதி பந்தோபாத்யா, உதவி கடற்படை தலைவரான புனிதா அரோரா மற்றும் லெப்டினன்ட் கர்னல் பரிதா ரஹ்மான் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

அப்போது நிர்மலா சீதாராமன் பேசுகையில், இந்தியாவில் நிலவும் பல்வேறு சூழ்நிலைகளை சமாளித்து பெண்கள் வெற்றி பாதையில் பயணம் செய்கின்றனர். எனவே அவர்கள் சிறப்பான வெற்றியை பெற்று வாழ்வில் உச்ச நிலையை அடைகின்றனர். இதை கருத்தில் கொண்டு வரும் காலங்களில் பாதுகாப்பு துறையில் இன்னும் அதிகளவில் பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Related Post