காவிரி விவகாரத்தில் சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி நடவடிக்கை – சித்தராமையா

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தின.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, “காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகள் என்ன? என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தெளிவாக கூறப்படவில்லை. சட்ட நிபுணர்கள் தரும் ஆலோசனைப்படி காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன” என பேட்டியளித்தார்.

நீர்வளத்துறை மந்திரி எம்.ஒய் பாட்டீல் கூறுகையில், “தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறக்க வாய்பில்லை” என தெரிவித்தார்

Related Post