கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம்

கருணைக்கொலை விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில்:-

மனிதர்களுக்கு கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு. அதனால் தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம். மருத்துவ சிகிச்சையால் காப்பாற்ற இயலாத மீளமுடியாத நோயினால் தவிப்பவர்கள் மரணிக்க அனுமதிக்கலாம்.

தன்மானத்துடன் இறப்பது மனிதரின் அடிப்படை உரிமை. அதன் அடிப்படையில், கருணைக் கொலை மற்றும் வாழும்போதே தன் உயிர் தொடர்பான உயில் எழுதி வைக்கும் நடைமுறை சட்டப்படி செல்லும் என தீர்ப்பு அளித்துள்ளது.

Related Post