35 ஆயிரம் அடி உயரத்தில் கமகமக்கும் பில்டர் காபி – ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் அறிமுகம்

குறைந்த கட்டணத்தில் விமானச் சேவைகளை வழங்கிவரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்நாட்டு சேவைகளுடன், வெளிநாட்டு பயணச் சேவைகளையும் திறம்பட நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில், மார்ச் முதல் தேதியில் இருந்து லண்டன், ஆம்ஸ்டெர்டாம், பாரிஸ் மற்றும் டொரான்ட்டோ நகரங்களுக்கு செல்லும் சர்வதேச விமானங்கள் மற்றும் அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்பும் விமானங்களில் செல்லும் முதல் வகுப்பு மற்றும் பிரிமீயர் பயணிகள் புதுவகை ‘சாம்பெய்ன்’ மது வகைகளையும் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான கமகமக்கும் பில்டர் காபியையும் சுவைக்க ஜெட் ஏர்வேஸ் ஏற்பாடு செய்துள்ளது என அந்நிறுவனத்தின் செயல் துணைத்தலைவர் ஜெயராஜ் ஷண்முகம் தெரிவித்துள்ளார்

Related Post