எச்.ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித்தனமானது – ரஜினிகாந்த் கடும் கண்டனம்

பா.ஜனதா தேசிய தலைவர் எச்.ராஜா தனது முகநூலில், “திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல தமிழகத்தில் பெரியார் சிலையும் அகற்றப்படும்” என்று கூறி இருந்தார்.

இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எச்.ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையே திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக பா.ஜனதா பிரமுகர் முத்துராமன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பெரியார் பற்றி விமர்சனம் செய்த எச்.ராஜாவுக்கும், பெரியார் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாகவும் நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்திடம், பெரியார் சிலை குறித்து எச்.ராஜா தெரிவித்த கருத்து பற்றி கேள்வி எழுப்பினார்கள். இதற்கு ரஜினிகாந்த் அளித்த பதில் வருமாறு:-

பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று எச்.ராஜா கூறியதும், பெரியார் சிலை உடைக்கப்பட்டதும் காட்டுமிராண்டித்தனமானது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்

Related Post